கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
திருச்சி, ஜூலை. 21- திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் வேலாயுதம் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (வயது22) இவர் சம்பவத்தன்று கணபதி நகர் ஆற்றுப்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது34) என்பவர் ஆகாஷ் குமாரிடம் பணம் கேட்டுள்ளார் இதற்கு அவர் பணம் தர மறுத்துள்ளார் உடனே அருண்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துச் சென்று தப்பி ஓடினார்.
இதுகுறித்து அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.1000 மற்றும் கக்தியை பறிமுதல் செய்தனர்.