முசிறி – தும்பலம் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

0 315
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 22  முசிறி மற்றும் தும்பலம் ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சி மற்றும் தும்பலம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முசிறி நகராட்சி சார்பில் தனியார் திருமண மண்டபம் மற்றும் தும்பலம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமினை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

முசிறி கோட்டாட்சியர் (பொறுப்பு) உதயகுமார், தாசில்தார் லோகநாதன், நகர்மன்ற ஆணையர் சண்முகம், உள்ளிட்ட பலர் முன்னிலையில் அரசு துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக பேசினர்.

அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு பட்டா, முதியோர் உதவித்தொகை,
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வருவாய்த்துறை, மருத்துவத்துறை, மின்வாரியத்துறை, வேளாண்மை துறை, நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களின் மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

முகாமில் அனைத்து துறைகள் சார்பில் பெறப்பட்ட மொத்த மனுக்கள் 416 இவற்றில் 179 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது 227 மனுக்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.