குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
திருச்சி, ஜூலை 22 குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம்
திருச்சி மாவட்ட காவல்துறையினரால், சட்ட விரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத இரண்டு சக்கர வாகனங்கள் – 33, நான்கு சக்கர வாகனங்கள் – 2 ஆக மொத்தம் 35 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேற்படி வாகனங்களின் ஏலம் வருகின்ற 29.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 29.07.2025 அன்று காலை 08.00 மணிக்கு தங்கள் ஆதார் அட்டையுடன் இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் 2000/- முன்பணமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 5000/- முன்பணமும் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரியாக (GST) இருசக்கர வாகனங்களுக்கு 12% GST மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18% GST தொகையையும் செலுத்தி ஏலம் எடுத்த வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், தெரிவித்துள்ளார்.