காட்டுப்புத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
திருச்சி, ஜூலை 24 பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்காடுவெட்டி தியாகராஜன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். அருகில் கோட்டாட்சியர் (பொறுப்பு) உதயகுமார், தொட்டியம் தாசில்தார் சேக்கிழார், பேரூராட்சி செயல் அலுவலர் கார்திகேயன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.