அதிவேகமாக பைக் ஓட்டியதை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் மீது வழக்குப்பதிவு

0 258
Stalin trichy visit

திருச்சி ஆக 4- திருச்சி அரியமங்கலம் கணபதி நகர சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45) இவர் நேற்று அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து உள்ளார்.இதனைப் பார்த்த கார்த்திகேயன் அஜித்திடம் ஏன் இவ்வளவு வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிவருகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் கார்த்திகேயன் அஜித் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அஜித் தனக்குத் தெரிந்த அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ராகவேந்திரன் (வயது 27) பழனி தீபக் (வயது 23) யுவராஜ் (வயது 27) ஆகியோரை அழைத்து வந்து கார்த்திகேயனிடம் மீண்டும் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த கார்த்திகேயன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கார்த்திகேயன் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் அஜித், ராகவேந்திரன், பழனி தீபக், யுவராஜ் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

Leave A Reply

Your email address will not be published.