அச்சக தொழிலாளியை தாக்கிய சிறுவர்கள் 2 பேர் கைது

0 229
Stalin trichy visit

திருச்சி ஆக 4 – திருச்சி இபி ரோடு கல்மந்தை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36) இவர் அச்சகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது வேலையை முடித்துக் கொண்டு இரவு வீட்டுக்கு வந்து தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.

அப்பொழுது வீட்டின் அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வரும் 16, 17 வயது சிறுவர்கள் 2 பேர் பிரகாஷிடம் தகராறு செய்து இருசக்கர வாகனத்தை இங்கு நிறுத்தக்கூடாது என்று கூறி சத்தம் போட்டு உள்ளனர். இதனால் பிரகாஷ் மற்றும் இரண்டு சிறுவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இரண்டு சிறுவர்களும் அவரது ஆதரவாளர்கள் ஹரிஹரன், ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து பிரகாசை கெட்ட வார்த்தையால் திட்டி அவரது கன்னத்தில் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பிரகாஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பிரகாஷ் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 16,17 வயது சிறுவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு உதவியாக இருந்த ஹரிஹரன் (வயது 18) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்டாலின் என்பவரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.