திருச்சியில் மின்னல் வேகத்தில் மாறும் மின்சார வாகனங்கள்
தமிழகத்தில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்கள் மாத வருமானத்தில் நூற்றுக்கு 40% பெட்ரோலுக்கு செலவிடுகிறார்கள்.சிலர் பெட்ரோல் விலைக்கு அச்சப்பட்டு கொண்டு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்.பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே போனால் வரும் காலங்களில் வாகனத்தை ((ஐலேசா ஐலேசா தள்ளித்தள்ளி ஐலேசா என்ற நிலை வந்துவிடும்)).இதற்குமுற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருச்சியில் மின்னல் வேகத்தில் எரிவாயு வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக வாகனங்களைப் பழுது பார்க்கும் கடைகள் செயல்படாமல் இருந்தது.கொரோனா தாக்கம் குறைந்து அந்த வகையில் தமிழக அரசு பல்வேறு தவறுகளை அறிவித்தது அதில் வாகனங்களை பழுதுபார்க்கும் தடைகள் திறக்கலாம் என உத்தரவிட்டது
இதனையடுத்து கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.திருச்சி சாஸ்திரி ரோடு பகுதியில் வாகனங்களை பழுதுபார்க்கும் கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையில் கடந்த 10 நாட்களாக வாகனங்களைப் பழுது பார்க்க வரும் வாடிக்கையாளர்கள். கடையின் உரிமையாளரிடம் பெட்ரோல் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.தற்போது உள்ள வாகனத்தை மின் வாகனம் ஆக மாற்ற முடியுமா என்று வாடிக்கையாளர்கள் தொடர்ந்துகேட்டுக்கொண்டிருந்தனர் இதனை சவாலாக எடுத்துக் கொண்ட கடையின் உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் முதலில் ஒரு வண்டியை பாகங்களை பிரித்து பேட்டரிகளை பொருத்தி ஆராய்ச்சி செய்தனர். ஆராய்ச்சியில் திருப்தியடைந்த பின் ஸ்கூட்டி மற்றும் கியர் வண்டிகளை பெட்ரோல் வாகனத்தில் இருந்து மின்சார வாகனங்களாக மாற்றி வருகிறார்கள்.தனியார் நிறுவனங்கள் பல்வேறு மாடல்களில் மின்சார வாகனங்களை விற்பனை செய்து வருகிறது பல்வேறு நிறுவனங்கள் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்தாலும் பெட்ரோல் வாகனங்களை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை திருச்சியில் செய்து வருவது பெருமைக்குரிய ஒன்று.

இது குறித்து தொழில்நுட்ப பொறியாளர் கூறுகையில் திருச்சியில் தற்போது பெட்ரோல் வண்டிகளை மின்சார வண்டிகள் ஆக மாற்றும் தொழில்நுட்பம் அதிகரித்து வருகிறது.நான்கு மணி நேரம் சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் .இதுபோல் வாகனங்களை மாற்றும்போது நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 unit மட்டுமே மின்சாரம் செலவாகிறது.மின்சார வாகனங்களைப் பயன்படுத்தினால் காற்று மாசுபாடு இருக்காது.பெட்ரோலில் இருந்து மின்சாரமாக மாற்றுவதற்கு 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றார்.

காலத்திற்கு ஏற்ற வாரு நாமும் மாறி கொள்ள வேண்டும்.விரகிள் துவங்கி மண்னை, சிலின்டர், மின்சாரம், தற்போது சோலார் வரை மாறிவிட்டது எனவே ஒரு பொருட்களின் விலை அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றார்போல் வேறு பொருட்களை மாற்றி கொள்ளவதே சாமத்திய தனம் என்கிறார்கள் சமூக ஆர்வர்கள்….