திருச்சி மாவட்டத்தில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

0 296
Stalin trichy visit

திருச்சி, ஆக.5 திருச்சி மாவட்டத்தில் 8 காவல் நிலையங்கள் உதவி ஆய்வாளர் நிலையில் இருந்து காவல் ஆய்வாளர் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 280 ஆய்வாளர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, உதவி ஆய்வாளர் தலைமையிலான 280 காவல் நிலையங்கள் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மணிகண்டம், பேட்டவாய்த்தலை, கள்ளக்குடி, கொள்ளிடம், காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம், புத்தாநத்தம் மற்றும் வளநாடு ஆகிய 8 உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்கள் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.