இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

0 179
Stalin trichy visit

திருச்சி ஆக. 6 திருவரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 58). இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் திரும்ப வரும்போது வாகனத்தை ஒரு வாலிபர் திருடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் திருவரங்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (வயது 21) என்பது தெரிய வந்தது .அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதே போல் திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த துரை என்பவரின் இருசக்கர வாகனமும் திருடு போனது. இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.