திருச்சியில் 3 பேர் உயிரிழப்பு: காவல்துறையினர் விசாரணை

0 206
Stalin trichy visit

திருச்சி ஆக 8- திருச்சி திருவரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.அவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து திருவரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிறகு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் வெள்ளி முத்தம் கிராம நிர்வாக அதிகாரி பாரதிதாசன் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரெங்கா ரெங்கா கோபுரம் அருகில் இறந்து கிடந்த நபர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல்  திருச்சி பஞ்சப்பூர் பசுமை பூங்கா அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார் இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இறந்த கிடந்த பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த பெண் யார் எ எந்த ஊரை சேர்ந்தவர்?என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயங்கி விழுந்தவர் ஒருவர் திடீர் சாவு

திருச்சி கிராப்பட்டி சிறப்பு காவல் படை பாலம் அருகில் உள்ள பகுதியில் கிராப்பட்டி ரெயில்வே காலனி அண்ணாநகரை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 53) என்பவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி திடீரென்று இறந்து போனார்.இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.