போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி ஆக.8 திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர்கள் போலீசார் வருவது பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர் இதனை அடுத்து போலீசார் அந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது கிராப்பட்டி ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 24) சுப்பிரமணியம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த வாசன் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது மேற்கண்ட இரண்டு வாலிபர்களும் போதை மாத்திரை விற்பனை செய்ய நின்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், பாட்டில், ஊசி மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
செல்போன் திருடிய சிறுவன் கைது :
திருச்சி தாரா நல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் வயது 49 இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணாபுரம் முஸ்லிம் நடுத்தெருவில் நடந்த சென்று கொண்டிருந்தார் அப்பொழுது இரண்டு பேர் அவர் அருகில் வந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர் இது தொடர்பாக ரமேஷ் குமார் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார் புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடிய கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.