குண்டூரில் நியாயவிலைக்கடை : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

0 152
Stalin trichy visit

திருச்சி, ஆக.11  திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிறைவேற்றினார்.
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் உள்ள பர்மா காலனி பகுதியில் சுமார் 2000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் நியாய விலை கடை கோரி அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். உடனடியாக நிறைவேற்றிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அந்த நியாய விலை கடைக்கு நிழற்குடை வேண்டி பொதுமக்கள் மீண்டும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக பள்ளிகளை துறை அமைச்சர் உடனடியாக தனது சொந்த நிதி
35 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிழற்குடை அமைத்து நேற்று அதை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் துப்புரவு பணியாளர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்‌.

Leave A Reply

Your email address will not be published.