அண்ணா விளையாட்டரங்கில் இளையோருக்கான தடகளப் போட்டிகள்

0 140
Stalin trichy visit

திருச்சி, ஆக.18  திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள்
ஆக.20, 21 ஆகிய  இரண்டு நாள்கள் நடக்கிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ தெரிவித்திருப்பதாவது,

திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் திருச்சி மாவட்ட தடகள போட்டி ஆக.20 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் 8, 10, 12,14,16, 18 மற்றும் 20 வயது பிரிவினருக்கான; ஆண்- பெண் இருபாலருக்கும் திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள்-2025. தொடக்கவிழாவும், 21 அன்று மாலை 5.30 மணிஅளவில் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.

தனி நபருக்கான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் தனி நபர் கோப்பை வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் புள்ளிகள் அடிபடையில் முதலாவதாக தேர்வு பெறும் அணிகள் மற்றும் பள்ளிகளுக்கு சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது.

தகுதி அடிப்டையில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், சென்னையில் வருகிற செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கும் அனைத்து மாவட்ட விளையாட்டு போட்டிகளுக்கு, கலந்து கொள்ள, தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு 996547330 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.