திமுக அரசை கண்டித்து சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்

0 167
Stalin trichy visit

திருச்சி, ஆக.18 தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களின் பணி பாதுகாப்பும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் திருச்சி மாவட்டம் சிஐடியு வலியுறுத்தல்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாவட்டம் சி ஐ டி யு சார்பாக சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு 13 நாட்கள் தொடர் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து திருச்சி மாவட்டம் சி ஐ டி யு தலைவர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தியும் இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சி ஐ டி யு திருச்சி மாவட்ட செயலாளர் ரங்கராஜன் பேசியது.. பணி பாதுகாப்பு, பணி நிரந்தம் கேட்டு… தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள் 13 நாட்கள் கடந்த நிலையில் போராட்டத்தை கடுமையாக ஒடுக்கியது தமிழக அரசு. மேலும் நட்டநடு இரவில் ஆயிரக்கணக்கான போலீசார் திரண்டு போராடிய பெரும்பாலான தூய்மைப் பணியாளர் பெண்களை அடித்து, மிதித்து பேருந்துகளில் ஏற்றி வெவ்வேறு இடத்தில் இறக்கிவிட்டது மிகவும் கொடுமையானது.

தூய்மைப் பணியாளர்களின் மீது கடுமையான தாக்குதலை நடத்திய காவல்துறையை கண்டித்தும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும்.

கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி திருச்சி மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் ஒப்பந்த பணியாளர்களாக , தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்டம் சி ஐ டி யு சார்பாக வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.