விவசாயிகளுக்கு வேளாண் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி

0 161
Stalin trichy visit

விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான வேளாண் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி.

திருச்சி மாவட்டம்  தொட்டியம் அருகே பிடாரமங்கலம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான வேளாண் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி முகாம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்த்தின் கீழ் தொட்டியம் வட்டார பகுதிகளில் தங்கி நேரடியாக விவசாயிகளுக்கான பல்வேறு களப்பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் நா. வர்ஷா, பா. அபிநயா, பா. பிரீத்தி, ரா. யாழினி, சக்தி. வ. அனுஷியா ஆகியோர் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான வேளாண் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி முகாம் நடத்தினர்.
இதில் மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடி மண் புழு உரம் தயாரிப்பு முறை குறித்து விரிவாக விளக்கி கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.