அன்பில் அறக்கட்டளை சார்பில் மாணவர் வழிகாட்டல் விருதுகள் வழங்கும் விழா
திருச்சி, ஆக.28 அன்பில் அறக்கட்டளை நடத்தும் மாணவர் வழிகாட்டல் விருதுகள் வழங்கும் விழா திருவெறும்புர் மான்ட்ஃபோர்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் ,பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் வை.குமார், திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா , மான்போர்ட் பள்ளி முதல்வர் அருட்சகோதரர் A.ராபர்ட் லூர்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வழங்கும் இடமாக சிறப்பு சொற்பொழிவாளர்கள் கீழ்காணும் தலைப்புகளில் உரையாற்றினர்
வையத் தலைமை கொள் சிகரம் சதிஷ்குமார் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர்.
மெய்ப் பொருள் காண்பதறிவு , மதுரை, வி.ராமகிருஷ்ணன் தன்னம்பிக்கை பேச்சாளர்கள் உரையாற்றினர்.