கே.கே.நகர் சீனிவாச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி, செப். 11 திருச்சி, இந்திரா நகர் சீனிவாச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி கே கே நகர் அருகே உள்ள இந்திரா நகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும்சீனிவாச பெருமாள் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் ஒன்றாகும். இத்தகைய பெருமை பெற்ற இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழாவானது தொடங்கியது. ஒன்பதாம் தேதி ரக்க்ஷா பந்தனமும், வேத பாராயணமும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக காலை 8.00 மணிக்கு, யாத்ராதானம், வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் ஒலிக்க, அதிர்வேட்டு முழங்க, மங்கல இசையுடன் கடம் புறப்பட்டு சிறப்பு பூஜைக்கு பிறகு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.