பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழப்பு

0 121
Stalin trichy visit

திருச்சி செப். 22 திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 65). இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கொள்ளிடம் ஆற்று பாலத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சந்திரசேகர் பலத்த காயமடைந்தார் .அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவனந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Leave A Reply

Your email address will not be published.