லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

0 217
Stalin trichy visit

 திருச்சி, அக்.7  நிலஅளவையர் (சர்வேயர்) கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார். 

கரூர், புகளூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற முன்னால் TNPL காகித மில் உதவி மேலாளர் அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் வாங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்ததன் பேரில், வீட்டுமனை தனிப்பட்டா வழங்க, ஏற்பாடு செய்ய திருச்சி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் நில அளவையராக பணிபுரியும் அருண் (வயது 34)  என்பவரை அணுகியபோது தனிப்பட்டா வழங்க நிலஅளவையர்  அருண் ரூ.24,000/- கையூட்டு கேட்டும், பின்னர் ரூ.9,000/- ஆக குறைத்து கையூட்டு கேட்டுள்ளார்.

கையூட்டு கொடுக்க விரும்பாத   ராஜேந்திரன்  திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று  துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது நில அளவையர் (சர்வேயர் அரூண் லஞ்சப்பணம் ரூ.9,000/-ஐ ராஜேந்திரனிடமிருந்து கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிப்பட்டார். இது தொடர்பாக திருச்சி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.