கிராம சபை கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு
திருச்சி, அக்.11 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், பொய்கைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157ஆவது பிறந்த நாளினையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்கு கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சினீவாசன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் குமார், உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) திருச்செல்வம், உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) குணாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, லதா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.