போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது

0 277
Stalin trichy visit

திருச்சி அக்.11 சிவகங்கை மாவட்டம் நடுவப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 52). இவர் நேற்று வெளிநாடு செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார்.அப்போது இவருடைய பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை இமிகிரேஷன் அதிகாரிகள் பரிசோதித்தனர். அதில்,பிறந்த தேதி ,பெயர் ஆகியவற்றை போலி ஆவணங்கள் மூலம் தயார் செய்து பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

இந்நிலையில் இமிகிரேஷன் அதிகாரி நவீன் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் பயணி ஜெயக்குமாரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.