சுமை தூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
திருச்சி அக் 22 திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32) இவர் சுமை தூக்கும் தொழிலாளி. இந்நிலையில் நேற்று முன் தினம் மணிகண்டன் இபி ரோடு பகுதியில் தட்டு ரிக்க்ஷாவில் அமர்ந்து மது குடித்துக்கொண்டே இருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த கருணாகரன் என்பவர் குடிபோதையில் அங்கு வந்து மணிகண்டனியிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். பிறகு வடக்கு தாராநல்லூரை சேர்ந்த தனது சகோதரர் மற்றொரு மணிகண்டன் (வயது 25) என்பவரை செல்போனில் அழைத்து விஷயத்தை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் நேரில் வந்து சுமை தூக்கும் தொழிலாளி மணிகண்டனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சுமை தூக்கும் தொழிலாளி மணிகண்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்துள்ளனர்.