மழையால் சேதமடைந்த வீடு : நிவாரண உதவி வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல்
திருச்சி, அக்.22 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மழையால் சேதாரமான வீட்டினை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது இந்நிலையில்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதிக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவில் வசிக்கும் ஜாக்குலின் மேரியின் வீடு மழையால் சேதமடைந்த தகவல் அறிந்து இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரணத் தொகை வழங்கி அரசு அதிகாரிகளிடம் அடுத்த கட்ட நிவாரண பணிகளை உடனே செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாநகர செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர் தர்மராஜ், மாமன்ற உறுப்பினர் சித்தாலட்சுமி வட்ட செயலாளர் முருகானந்தம், தமிழ்மணி ஆகியோர் உடனிருந்தனர்.