திருவெறும்பூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

0 198
Stalin trichy visit

திருச்சி, அக்.22 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் வார்டு எண். 9 முதல் 12 வரை உள்ள பகுதி பொதுமகள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணசமுத்திரம் எழில்நகர், ஓய்வுபெற்ற ஊழியர் சங்க மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதையும் முகாமின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருவெறும்பூர் வட்டாட்சியர் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.