மாநில அளவிலான பென்சாக் சிலாட்போட்டிகள்
திருச்சி, அக்.25 தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தோனேசியாவின் பாரம்பரிய தற்காப்பு கலையான பென்சாக் சிலாட்போட்டிகள் மாநில அளவில் நடைபெற்றது, 270 வீராங்கனைகள் பங்கேற்பு
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் தமிழ்நாடு பென்சாக் சிலாட் சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான அஸ்மிதா கேலோ இந்தியா போட்டியை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தொடங்கி வைத்தார், போட்டியில் தமிழகத்தில் உள்ள கடலூர், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இருந்து 270 ற்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர், இதில் வெற்றி பெறும் வீரர்கள் தென்னிந்திய போட்டிக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்படுவார்கள், இப்போட்டிகளில் டேண்டிங், துஙகள், ரகு, சோலோ, கண்டா ஆகிய போட்டிகள் நடைபெற்றது, போட்டிகளில் மாநில செயலாளர் மகேஷ் பாபு, மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்,
இது பெண்களுக்கு தற்காப்பு கலையான இந்தோனேசியாவின் பாரம்பரிய தற்காப்பு கலை என்பது குறிப்பிடத்தக்கது,
இதனை தமிழகத்தில் இச்சங்கம் பெண்களுக்கு பயிற்சி அளித்து இக்கலையை வளர்த்து வருகின்றனர்..