வேன்மீது மோதிய ஆம்னி பேருந்து : ஓட்டுநர் சாவு : 20 பயணிகள் காயம்

0 155
Stalin trichy visit

திருச்சி அக் 27- காரைக்காலில் இருந்து 34 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் கோவை நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த ஆம்னி பஸ் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கரூர் சாலையில் கடியாக்குறிச்சி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது திடீரென்று பஸ்சின் டயர் வெடித்தது.
இந்த விபத்தில் பஸ் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேன்மீது மோதியது.

இந்த விபத்தில்தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் கார்த்தி (வயது 33)என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மேலும் எதிரே வந்த வேனின் டிரைவர் எதிர்மறை சேர்ந்த பிரசன்னா (வயது 40) மற்றும் பஸ்சில் பயணம் செய்த 20 பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது.

பிறகு அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.