வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் : காவல்துறையினர் விசாரணை

0 225
Stalin trichy visit

திருச்சி, அக். 27  திருச்சி கே.கே. நகர் பிரேம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் ( வயது 66).திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். கடந்த 25 ந்தேதி இரவு தனது வீட்டில் மனைவி , மகள் மருமகன் ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை 2.15 மணியளவில், சத்தம் கேட்டு, இவரது மனைவி விழித்தெழுந்தார். அப்பொழுது மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்து தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் பறிக்க முயன்றார். இதையடுத்து உடனே அதனை தடுக்க முயன்றபோது, மர்ம ஆசாமிகள் மனோகரன் மற்றும் அவரது மருமகனை கல்லால் தாக்கி
அவரை கீழே தள்ளிவிட்டு மற்றொரு மர்ம ஆசாமியுடன் தப்பிச் சென்றார். இதில் தலையில் மனோகரனுக்கு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கேகே நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய இரண்டு மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.

 

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கங்கை நகர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 50 )இவர் எடமலைப்பட்டி புதூர் குட்டி மலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகரை சேர்ந்த விஜய் (வயது 26) என்ற ரவுடி சிவலிங்கத்திடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிவலிங்கம்  எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.