காமராஜர் நூலகம் – அறிவுசார் மைய கட்டிடப் பணிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
திருச்சி, அக். 31 திருச்சிராப்பள்ளி, டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது.
விரைவில் திறப்பு விழா காண உள்ள காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு (21.03.2025) அடிக்கல் நாட்டி அதனைத் தொடர்ந்து மிக விரைவாக நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை ஒவ்வொரு கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்வின் போது கட்டிட பொறியாளர்கள் அரசு உயர் அதிகாரிகள் , வல்லுநர்கள் உடனிருந்தனர்.