கறிக்கடை ஊழியர் திடீர் சாவு : போலீசார் விசாரணை
திருச்சி அக் 31- திருச்சி விமான நிலையம், காமராஜர் திலகர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50 )இவர் அந்த பகுதியில் உள்ள கறிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர். நேற்று வீட்டின் அருகே மது குடித்துவிட்டு படுத்திருந்தார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை எழுப்பி பார்த்தபோது சண்முகம் இறந்து இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி விமான நிலைய காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகம் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.