திருச்சி தெற்கு மாவட்டத்தில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சி கூட்டம்

0 141
Stalin trichy visit

திருச்சி, நவ.1 திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதியில் திருச்சி கிழக்கு மாநகரம் கலைஞர் நகர் பகுதி – அன்பில் தர்மலிங்கம் தெருவில் வார்டு எண்.64 பாகம் எண். 250 “என் வாக்குச்வாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பேசும் போது,
அரசினுடைய சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நம் ஆட்சியின் பயன்களை பெற்ற பயனாளிகளை அடையாளம் காண வேண்டும் சரியான புதிய வாக்காளர்களை சேர்க்கவும் தவறுதலான போலியான வாக்காளர்களை நீக்கவும் துரிதமாக பணியாற்ற வேண்டும் இல்லங்கள் தோறும் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்

இப்பயிற்சிக் கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர்  மு. மதிவாணன் தொகுதி பார்வையாளர் கதிரவன் பகுதி கழகச் செயலாளர் மணிவேல் வட்டக் கழகச் செயலாளர் ஆனந்த் மற்றும் இக்கூட்டத்தில் வட்டக் கழக நிர்வாகிகள் வட்டத்திற்கு உட்பட்ட அணிகளின் அமைப்பாளர்கள்
பி எல் ஏ, பி எல் சி, பி டி ஏ, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.