மூத்த குடிமக்களை பராமரிக்க “அன்புச்சோலை” திட்ட மையம் : அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு
திருச்சி, நவ.1 தமிழ்நாடு முதலமைச்சரால் மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடு விரைவில் தொடங்கி வைக்கப்படவுள்ள “அன்புச்சோலை” திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர் மு மதிவாணன் பகுதி ச் செயலாளர் தர்மராஜ் மாமன்ற உறுப்பினர் ரமேஷ் உடன் இருந்தனர்