பேராசிரியரிடம் லேப்டாப் திருட்டு: வாலிபர் கைது
திருச்சி நவ .13 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் ராஜா (39) . இவர் சம்பவத்தன்று, திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு காந்தி மார்க்கெட் பால்பண்ணை அருகே பஸ் ஏறினார். பஸ் பால்பண்ணையை கடந்து சிறிது தூரம் சென்றபோது மர்ம நபர் ஒருவர் அவரிடம் இருந்த லேப்டாப்பை பறித்து சென்றார்.
இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (27) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .தப்பி ஓடிய அதே பகுதியைச் சேர்ந்த வெட்டு வெங்கடேஷ் ( 34 ) என்பவரை தேடி வருகின்றனர்.