பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
திருச்சி நவ 17 திருச்சி தென்னூர் ஆபிஸர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து இவரது மகன் பால்பாண்டி (வயது 26) இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில்
உறையூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டது இதைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.
இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த பால்பாண்டி ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பெற்று வந்த பால்பாண்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.