பொன்முச்சந்தி திருமுக்தீஸ்வரர் கோவிலில் 108 சங்கு பூஜை : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருச்சி, நவ.25 மணப்பாறை அருகே பொன்முச்சந்தி திருமுக்தீஸ்வரர் கோவிலில் 108 சங்கு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.
கார்த்திகை மாதம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சந்திரனின் அம்சமாக போற்றப்படும் சங்குகளில் புனிததீர்த்தம் நிரப்பி, அதைக்கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப்போல, பக்தர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் என்பது ஐதீகம்.
அதன்படி திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொன்முச்சந்தியில் உள்ள 2000 ஆண்டுகள் பழைமையான திருமுக்தீஸ்வரர், அந்தாள் ஈஸ்வரி ஆலயத்தில் கார்த்திகை இரண்டாவது சோமவாரமான இன்று மாலை உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் மக்கள் யாவரும் நோயற்ற வாழ்க்கை வாழவும், எல்லையற்ற இன்பங்களைப்பெற்று சுபிட்சமாக வாழவேண்டி 108 சங்காபிஷேகம் பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவபெருமானுக்கு புனிதநீர்கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது. சில வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் உள்ளிட்ட பெருந்திரளான பக்தர்கள் கொண்டு கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோசத்துடன் பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.