அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி துறையூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை
திருச்சி, நவ.29 துறையூர் நகராட்சி அலுவலகத்தை 23 வது வார்டு பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றம் சாட்டி முற்றுகை.நகராட்சிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் .. 23 வது வார்டு கவுன்சிலர் அதிமுக மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாக கூறப்படுகிறது…
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டு (அதிமுக கவுன்சிலர்) பகுதியில் 1400 ற்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளது, அப்பகுதியில் அடிப்படை வசதிகளான கழிவறை இல்லாததால் அப்பகுதி பெண்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக கூறுகின்றனர்,
தொடர்ந்து பல ஆண்டுகளாக எந்தவித சாலை மற்றும் மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என குற்றச்சாட்டாக உள்ளது,
அடிப்படை வசதி செய்து தர நகராட்சி நிர்வாக மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் 23 வது வார்டு உறுப்பினர் அதிமுக என்பதால் திமுக நகர்மன்ற தலைவர் மற்றும் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளதால் 23 வார்டை புறக்கணிப்பதாகவும் பட்டியல் இன மக்கள் வார்டு என அறிவித்தும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என கூறப்படுகிறது,
ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று 25க்கும் மேற்பட்டோருடன் சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து நகராட்சிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்,
தகவல் அறிந்த துறையூர் நகராட்சி ஆணையர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை மேற்கொள்கிறேன் கூறியதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது,
அதிமுக கவுன்சிலர் என்பதால் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு உள்ள நிலையில் போர்கால அடிப்படையில் அடிப்படை வசதி செய்து தர அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்