விடுதியின் பூட்டை உடைத்து திருடியவர் கைது
திருச்சி, நவ.29 திருச்சியை அடுத்த துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை அய்யம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது52). திருச்சி ராஜா காலனியில் உள்ள நர்சிங் ஹோமில் கணக்காளராக பணிபுரிகிறார். இந்நிலையில் அங்கு ஒரு பெண்கள் விடுதி புதுப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கடந்த 25 ம் தேதி விடுதியைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார்.பின்னர் . 27ந்தேதி விடுதிக்கு வந்து பார்த்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் விடுதியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து மின்சார வயர், மின்விசிறி – 2, கிரில் கேட் – 3 ஆகியவற்றை திருடி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் செசன் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து கருமண்டபம் குளத்துக்கரை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது19 ), கைது செய்து 2 மின்விசிறிகளை பறிமுதல் செய்தனர்.மேலும் பிரேம்குமார், தினேஷ் குமார் ஆகியோர் மீது வழக்கு பதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.