முசிறி கிளை நூலகத்தில் ஓவியப்போட்டி
திருச்சி, டிச.1 முசிறி முழுநேர கிளை நூலகத்தில் ஓவியப்போட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறி முழுநேர கிளை நூலகம், நூலக வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து நூலக வார விழாவை முன்னிட்டு இன்று மாலை நான்காம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஓவிய போட்டி நடத்தினர்.
இந்த ஓவிய போட்டிக்கு முசிறி முழுநேர கிளை நூலகர்கள் தனலட்சுமி, அகிலா தலைமை வகித்தனர்.
வாசகர் வட்ட உறுப்பினர்கள் ரகுநாதன், சித்ரா, துரைமுருகன், சீனிவாசன், சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர், போட்டியினை தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா பங்கேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இப்போட்டியில் நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இயற்கை காட்சி குறித்து விரைந்தனர், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தமிழர் திருநாள் குறித்த ஓவியங்கள் வரைந்தனர், ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் நமது கிராமம் எனும் தலைப்பில் ஓவியங்கள் வரைந்தனர், இந்த ஓவிய போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு ஓவியம் வரைவதற்கு தேவையான சார்ட்அட்டை நூலகம் சார்பில் வழங்கினர், மேலும் ஓவியம் வரைவதற்கு தேவையான பென்சில், ரப்பர் மற்றும் கலர் பென்சில் உள்ளிட்டவைகளை மாணவ மாணவியர்களே கொண்டு வந்து ஓவியங்கள் வரைந்தனர்.
இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்களது ஓவிய திறமையை வெளிப்படுத்தினார். ஓவிய போட்டியில் பங்கேற்று வரைந்து சிறப்பிடம் பெற்றவர்களுக்கு டிசம்பர் மாதம் இறுதியில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும், முன்னதாக பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும் என்று முசிறி கிளை நூலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது