மழையால் சேற்றில் மூழ்கிய பொன்மலை ரயில்வே வாரச்சந்தை : சீரமைக்க கோரிக்கை
திருச்சி, டிச.1 திருச்சி பொன்மலைரயில்வே வாரச்சந்தை,மழையால் முழுவதும் சேற்றில் மூழ்கி பெரும் அவலநிலையை சந்தித்து வருகிறது. சந்தையின் நடுவழிகள் மற்றும் கடைக்கள் முன்னால் சேறு களிமண் தேங்கியதால்,வாங்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
காலணி அணிந்து செல்ல முடியாத அளவுக்கு சேறு குவிந்துள்ளதால், காய்கறிகள் விற்பனைபடும் பகுதிகளும் சேற்றால் சூழப்பட்டதால் சுகாதார சிக்கல்கள் உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளது. மழை நீர் வடிகால் இல்லாமை, கான்கிரீட்நடைபாதை,கழிப்பறை, குடிநீர்போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி
மழைக்காலத்திலும் பொன்மலை வாரச்சந்தையில் மக்கள் பாதுகாப்பாக வர்த்தகம் செய்யும் சூழலை உருவாக்குவது ரயில்வே அதிகாரிகளின் பொறுப்பாகும். சந்தையில் புதுப்பிக்க வேண்டும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கே.சி.நீலமேகம் கேட்டுக்கொள்கிறார்.