என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி: தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில்மகேஸ் பங்கேற்பு
திருச்சி, டிச.8 என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமானமு.க.ஸ்டாலின் தி்முக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் காணொளி காட்சி வாயிலாக தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் .
திருச்சி தெற்கு மாவட்ட மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காணொளி காட்சி மூலம் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் , தேர்தல் பொறுப்பாளர்கள் அண்ணாமலை, கதிரவன், மணிராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வன்னை அரங்கநாதன் கே என் சேகரன் சபியுல்லா பகுதி ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…