என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 22
Stalin trichy visit

திருச்சி, டிச.12 என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திருச்சி தெற்குமாவட்ட திமுகவிற்கு உட்பட்ட திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகரத்தில் பல்வேறு பகுதியில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பூத் வாரியாக பரப்புரை கூட்டத்தை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான
மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்சியாக திருச்சி தெற்கு  மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகரத்தில் வார்டு எண் 41 வாக்கு சாவடி எண் 58 , வார்டு எண் 16 பாகம் எண் 37 வார்டு 37பாகம் எண் 112 , வார்டு எண் 45 பாகம் எண்198, வார்டு எண் 34 அ, பாக எண்140 துவக்கி வைத்து பரப்புரையை மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் மு.மதிவாணன் பகுதிச்செயலாளர்கள் நிலமேகம், தர்மராஜ், விஜயகுமார், சிவக்குமார், வட்டக் கழகச் செயலாளர்கள் V.Pகருணாகரன், தங்கவேலு, முருகானந்தம், விஸ்வநாதன், கருணாநிதி மற்றும் BLA2 மற்றும் BLC உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.