பொன்மலைப்பட்டி கடைவீதியில் சுரண்டப்பட்ட சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
திருச்சி, டிச.12 திருச்சி மாநகராட்சி 45-வது வார்டு, 46-வது வார்டுகளை இணைக்கும் பொன்மலைப்பட்டி கடைவீதி சாலை மாநில நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமானது. சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க முடிவு செய்த மாநில நெடுஞ்சாலைத் துறை இதற்காக அண்மையில் ஒப்பந்தம் விட்டது.இந்த சாலையின் சீரமைப்புப் பணிக்காக மில்லிங் இயந்திரம் கொண்டு சாலையை சுரண்டினார். ஆனால், சுரண்டப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்றுவரை சாலை சீரமைக் கப்படவில்லை. மேலும், சுரண்டப்பட்ட சாலையில் வாகனங்களை ஓட்டுவதால் பலரும் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
எனவே, பொதுமக்கள் நலன்கருதி பொன்மலைப்பட்டி கடைவீதி சாலை போடும் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை விரிவுபடுத்தி பிறகு சாலை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
மின்கம்பம் எல்லாம் ஆக்கிரமித்து கடைகள் கட்டி உள்ளார்கள்
