ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு

0 123
Stalin trichy visit

திருச்சி, டிச.22  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாதுரை ஊராட்சியில் உள்ள பனையடியான் கோயில் அருகில் புதுவசந்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர் சன்னாசி (68). இவரது மனைவி இந்திராணி (54)  இவர்களுக்கு ஹரிகரன் (35) கார்த்தி (37) பூர்ணிமா (36) ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சன்னாசியின் மகன் கார்த்தி வெளியூரில் வேலை செய்து வருகிறார் பூர்ணிமா திருமணமாகி மாமனார் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு இந்திராணியும் ஹரிகரனும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட முகமூடி அணிந்த 4 கொள்ளையர்க அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து உள்ளே நுழைந்து அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஹரிஹரனின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர் இதனைக் கண்ட இந்திராணி ஓடிவந்து என் மகனை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்னிடம் இந்த செயின் மட்டும் தான் உள்ளது என்று கழுத்தில் உள்ள தங்க சங்கிலியை கழற்றிக் கொடுத்துள்ளார். அதன் பிறகு 4 கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

தகவல் அறிந்து வந்த சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.