புள்ளம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, டிச.22 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள காமராஜர் சிலை முன்பு 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றுவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன போராட்டம் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திருச்சி இளையராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ரெங்கராஜன், மாவட்ட எஸ்சி. எஸ்டி மாவட்டத் தலைவர் சிவசாமி, லால்குடி வட்டார தலைவர் சுப்பிரமணியன், புள்ளம்பாடி வட்டாரத் தலைவர் தங்கவேலு, வான்டராம்பாளையம் சோமு, தாப்பாய் ராஜரத்தினம்,ராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜா, அமல்ராஜ், மேலவாளாடி அப்துல் காதர், புள்ளம்பாடி பரமசிவம், குமுளூர் பழனிச்சாமி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மகளிர் அணியினர் என 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.