திருவெறும்பூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

0 136
Stalin trichy visit

திருச்சி, ஜன.13  திருவெறும்பூர் அருகே சூதாட்டத்தில்  ஈடுபட்ட 7 பேரை துவாக்குடி போலீஸ் ஆர் கைது செய்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டை மாரியம்மன் கோவில் தெருவில் பகுதியில் சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டு வருவதாக துவாக்குடி காவல் ஆய்வாளர்  நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற நாகராஜன் தலைமையிலான போலீசார் ஜெயிக்கிறது தோக்குது என வெட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவக்குமார், சந்துரு, ரங்கராஜ், முகேஷ். குமார். கார்த்தி, திருப்பதி, சக்திவேல் ஆகியோரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து
156 சீட்டுகள் கொண்ட மூன்று சீட்டு கட்டுகள் சூதாடிய பணம் ரூ 6000 மற்றும் 6 செல்போன்கள்பறிமுதல் செய்தனர் பின்னர் அவர்கள் அனைவரையும் துவாக்குடி காவல் நிலையம் அழைத்துச் சென்று இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.