புறத்தாக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் 75 -வது ஆண்டு முப்பெரும் விழா

0 224
Stalin trichy visit

திருச்சி, ஜன.13  திருச்சி புறத்தாக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் 75 -வது ஆண்டு முப்பெரும் விழா – நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆண்டு முப்பெரும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் தலைமையில் நடைபெற்றது .

விழாவில் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி , கும்பகோணம் மறை மாவட்ட பேராயர் ஜீவானந்தம் அமலநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பள்ளி குறித்த புத்தகத்தினை வெளியிட்டனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் 75 ஆண்டுகால பள்ளியின் சாதனை குறித்த விளக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

இந்நிகழ்வில்  மறை மாவட்டம் முதன்மை குரு பிலோமின் தாஸ் , மறை மாவட்ட பொருளாளர் அந்தோணி ஜோசப் , லால்குடி மறை மாவட்ட முதன்மை குரு சேவியர் , பங்கு தந்தை (தாளாளர் ) கஸ்பர் , முதுகலை ஆசிரியர் ராஜேந்திர சேகர் ,அன்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

மேலும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் ,மாணவ , மாணவிகள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பள்ளி பவள விழாவை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.