மணப்பாறையில் திராவிட பொங்கல் விழா

0 142
Stalin trichy visit

திருச்சி, ஜன.13  மணப்பாறையில் திமுக சார்பில் திராவிட பொங்கல் விழா.
சமத்துவ பொங்கல் வைத்து மாநில அளவிலான கபாடி போட்டி துவக்கம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதிய காலனியில் உள்ள கலைஞர் விளையாட்டு அரங்கில் தெற்கு ஒன்றிய திமுகவின் சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி துவங்கியது. முன்னதாக விழா அரங்கம் முன்பாக புதுப்பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.

அதனைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற கபாடி போட்டியை திமுக திருச்சி தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் லீலாவேலு, முன்னாள் ஒன்றிய சேர்மன் அமிர்தவள்ளி ஆகியோர் முதல் போட்டியில் களமிறங்கிய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டியை துவக்கிவைத்தனர்.

போட்டியில் திருச்சி, திண்டுக்கல், சென்னை, கரூர், புதுக்கோட்டை, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றுள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.30 ஆயிரம், தலா ரூ.20 ஆயிரம் மூன்றாம் நான்காம் பரிசாக வழங்கப்பட உள்ளது. போட்டியை திமுக வினர் மற்றும் கபாடி ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.