விவசாய சங்க தலைவரை விடுதலை செய்யக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

0 253
Stalin trichy visit
திருச்சி ஜன.19 விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய விவசாய சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகேசனை  திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.  
அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் எஸ் செல்வம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்தார் மேலும் ஈசனை விடுதலை செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோஷம் எழுப்பி போராட்டத் தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் மீது ஈசன் மீது தொடரப்பட்ட  வாபஸ் வாங்கு, தமிழகம் முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய் என கோஷங்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் வயலூர் ராஜேந்திரன்,  அழகப்பன், கொத்தட்டை ஜெகதீசன் பொன் ராமன் செந்தில் மோகன் மோகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.