சார் பதிவாளர் அலுவலக கழிப்பறையில் ரத்த கரையினால் பரபரப்பு
திருச்சி, ஜன.19 சார் பதிவாளர் அலுவலக கழிப்பறையில் ரத்த கரையினால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் சமயபுரம் செல்லும் சாலையில் சார் பதிவாளர் அலுவலக செயல்பட்டு வருகிறது. பொங்கல் விடுமுறையை தொடர்ந்து இன்று சார் பதிவாளர் அலுவலக பெண் உதவியாளர் அலுவலகத்தை திறந்துள்ளார்.
பின்னர் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட அவர் தொடர்ந்து கழிவறை கதவு பூட்டுகளை திறப்பதற்கு சென்றுள்ளார்.
அப்போது கழிவறை அருகே தரை மற்றும் சுவற்றில் படிந்திருந்த ரத்த கறையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் ரத்த கறை படிந்த இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ரத்த கறை ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக போலீசார் ரத்த கறை படிந்த டைல்ஸ் கற்களை சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரத்த கறை அந்த பகுதியில் எப்படி ஏற்பட்டிருக்கும், குற்ற சம்பவங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.