முசிறி அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
திருச்சி, ஜன.19 திருச்சி மாவட்டம் முசிறி அருகே முதுமக்கள் தாழி ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
முசிறி அருகிலுள்ள வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் இளைஞர்கள் விளையாடி கொண்டிருந்ததாகவும், அப்போது ஏதோ வித்தியாசமாக இளைஞர்களுக்கு தென்பட்டதாகவும், இளைஞர்கள் அருகில் சென்று பார்த்தபோது பெரிய பானையாக தெரிய வந்ததை தொடர்ந்து ஆழமாக குழி பறித்துப் பார்த்துள்ளனர், முற்காலத்தில் பயன்படுத்தி வந்த முதுமக்கள் தாழி போல இருந்தது, மேலும் பார்த்தபோது அந்தப் பானைக்குள் மண் விளக்கு சிறிதளவு எலும்பு துண்டுகள் சிறிய மண் பானை உள்ளிட்ட பொருள்கள் இருந்தன, இது குறித்து தகவலறிந்த முசிறி வருவாய் ஆய்வாளர் ஜிஜி, கிராம நிர்வாக அலுவலர் பிரியா மற்றும் முசிறி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அங்கு கிடைத்த பொருட்களை சேகரித்து, முசிறி சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் முசிறி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.