டிராகன் பழ உற்பத்தி : முன்னோடி விவசாயியுடன் நாளந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல்
திருச்சி, ஜன.20 டிராகன் பழ உற்பத்தியில் முன்னோடி விவசாயியுடன் கலந்துரையாடிய நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், திருமண மேடு கிராமத்தில் திரு.ஆசைத்தம்பி டிராகன் பழ உற்பத்தியாளருடன் நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடினர்.
தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் 3 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடியும், ஒரு ஏக்கர் நிலத்தில் துவரையும் ஒரு ஏக்கர் நிலத்தில் கடந்த 20 பிப்ரவரி 2024 அன்றிலிருந்து டிராகன் பழ உற்பத்தியையும் செய்து வருகிறார்.
இதற்கான முதலீடு தொகையாக ரூபாய் ஆறு லட்சம் செலவு செய்திருக்கிறார். முதல் அறுவடையாக கடந்த 2025 ஆம் ஆண்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் சந்தைகளில் கிலோ 150 என விற்பனை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல் அறுவடையாக சராசரியாக 200 கிலோ அறுவடை செய்து, இதன் மூலம் ரூபாய் 50,000 லாபம் ஈட்டி உள்ளதாக ஆசை தம்பி அவர்கள் தெரிவித்தார்.
ஒரு ஏக்கருக்கு 8×10 அடி என்ற கணக்கில் டிராகன் பழ செடி வளர்வதற்கு ஏதுவாக மொத்தம் 500 கல் நாட்டி உள்ளார்.ஏழு அடி உயரமான கல்லை இரண்டு அடி மண்ணுக்கு அடியில் புதையும்மாறும் ஐந்து அடி வெளியில் இருக்கும் மாறும் இதனை நிலத்தில் த ஊன்றியுள்ளார். ஒரு கல் ரூபாய் 350 க்கு வாங்கியுள்ளார்.
டிராகன் பழ உற்பத்தியில் ஆறு மாதம் வருமானமும் ஆறு மாதம் எந்த ஒரு வருமானமும் இல்லாமல் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த டிராகன் பழ நாற்றுகளை ஒரு ஏக்கருக்கு 2000 என விராலிமலை நாற்றுப்பண்ணையில் இருந்து ஒரு நாற்று ரூபாய் அறுபதுக்கு வாங்கி இருக்கிறார்.
இவரை நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ச.வினோத், ஜா.சாம் குமார், ஜெ. சுரேந்தர், ச.சந்தோஷ், பு.சக்தி, க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர் நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் தாளாளர் அல்லி இங்கர்சால், முதல்வர் முனைவர். ஜெ.வெங்கட பிரபு, முனைவர். பா. குணா இணைப் பேராசிரியர் துறைத் தலைவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், பா.நந்தகுமார் முதுநிலை உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், ம.சுரேஷ் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி டிராகன் பழ உற்பத்தியை பற்றி தெரிந்து கொண்டனர்.